fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களின் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள்

மாணவர்களின் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள்

ஈரோடு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. அறக்கட்டளையின் கீழ் நந்தா கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. பி-பார்ம் கல்லூரி ஈரோட்டில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.

பின்னர் 32 ஆண் டுகளில் 19 கல்வி நிறுவனங்கள் என்ற ஆலமரமாக நந்தா வளர்ந்து நிற்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முதல் பாரா மெடிக்கல் கல்லூரியாக நந்தா உருவானது. 60 மாணவர்களுடன் தொடங்கிய நந்தா இன்று 15 ஆயிரம் மாணவர்கள், 1,500 பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என்று பரந்து விரிந்த கல்வி சாம்ராஜ்யமாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் இல்லை என்ற குறையை கடந்த 2023-ம் ஆண்டு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தீர்த்தது.
ஈரோட்டில் மிக சிறந்த கல்வி நிறுவனமாக செயல்படும் நந்தா கல்வி நிறுவனத்தில் படிக்க வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 214 உயர்தர நிறுவனங்களின் மூலமாக பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். மேலும் ஆண் டுக்கு ரூ.44 லட்சம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு களை மாணவர்கள் பெற் றிருக்கின்றனர். இது நந்தா கல்வி நிறுவனங்களின் வரலாற்றில் மைல்கல்லாக கூறத்தக்கது.


நந்தா கல்வி நிறுவனங்களின் நோக்கம் என்பது கல்வி மட்டுமல்ல. ஒழுக்கம், உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மாணவர்களின் வாழ்வியல் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் யோகா, தியானம் ஆகியன முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.


கல்வி, ஒழுக்கம், சமூகப்பணி என அனைத்து பிரிவுகளில் நந்தா மாணவர்கள் தடம் பதித்து உள்ளனர். நந்தா கல்வி நிறுவனத்தில் படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக வேலைவாய்ப்பு துறை செயல்படுகிறது. 125-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய் யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது 208 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன. கல்லூரிகளில் உள்ள பிரமாண்ட நூலகங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த கங்கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள் 17 ஆயிரத்து 490 பேர் கல்லூரியுடன் இணைந்து செயல்பட்டு மாணவர்களை வழிநடத்துகின்றனர்.


நந்தா கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட “Empower” என்ற சிறப்பு அமைப்பின் முதன்மை நோக்கம், பெண்கள் தங்களது முழுமையான வாழ்வியல் திறன்களை மேம்படுத்தி கொள்ள உதவுவதாகும். தற்காப்புப் பயிற்சி, சமையல் கலை, மேடை பேச்சுத்திறன், வாகன ஓட்டுனர் பயிற்சி என பலதரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவிகள் தைரியம், சுயநம்பிக்கை, சமூகத்தில் தடம் பதிக்கும் ஆளுமையுடன் வளர்ச்சி பெறுகின்றனர்.


மாணவர்களின் ஒட்டு மொத்த மேம்பாட்டுக்காக இடை நிறுத்தம் இன்றி புதுமைகளை முன்னிறுத்தும், வளர்ச்சிக்கு வழிகாட்டும் முன்னணி கல்வி வளாகமாக நந்தா திகழ்கிறது. ஆங்கில மருத்துவம் மட்டும் அல்லாமல், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மற்றும் யோகாசன முறை மருத்துவத்தை நந்தா எளியவர்களுக்கும் எட்டும் வகையில் வழங்கி வருகிறது என்ற பெருமிதத்துடன் கூறினார்

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன். இவருடன் இணைந்து அறக்கட் டளையின் செயலாளர் எஸ்.நந்த குமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் மாணக்கர்களின் நன்மைக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img