fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் சாரண, சாரணியர்கள் கவர்னர் விருதுக்கு தேர்வு முகாம்

சிதம்பரத்தில் சாரண, சாரணியர்கள் கவர்னர் விருதுக்கு தேர்வு முகாம்

சிதம்பரத்தில், கவர்னர் விருதுக்காக கடலூர் மாவட்ட சாரண சாரணியர்கள் தேர்வு முகாம் நடந்தது.

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் 3 நாட்கள் நடந்த முகாமில், வடலூர், கடலூர், சிதம்பரம் சாரண மாவட்டத்தின் சார்பில் 49 பள்ளிகளில் இருந்து, 288 சாரணர்கள், 141 சாரணியர்கள், 52 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.முகாம் நிறைவு விழாவிற்கு வீனஸ் பள்ளி குழும தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார்.

துணை தாளாளர் ரூபியாள் ராணி, முதல்வர் நரேந்திரன், பயிற்சியாளர் இளைய குமார், வடலூர் மாவட்ட சாரண ஆணையர் முருகையன், சாரணிய ஆணையர் சுகிர்தா தாமஸ் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைமையகம் சார்பில், முதன்மைத் தேர்வாளர்களாக வேலாயுதம், வீரப்பா, செந்தில்குமார், கிரிஜா, ஜெயந்தி ஆகியோர் பங்கேற்று ற்று கவர்னர் விருதுக்கான சாரண, சாரணியர்களை தேர்வு செய்தனர்.

முகாமில் சாரண உறுதி மொழி, சாரண சட்டம், குறிக்கோள் பாடல்கள், முதலுதவி, நிலப்படக் கலை, முடிச்சுகள், கூடாரம் அமைத்தல், மதிப்பீடு போன்ற பாடத்திட்டத்தின் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடந்தன.

முகாம் ஏற்பாடுகளை, சிதம்பரம் மாவட்டச் செயலர் பாக்கியராஜ், அமைப்பு ஆணையர்கள் ஆம்ஸ்ட்ராங், கோமதி, எழில்ராஜ், விஜயசாந்தி, வெங்கடேசன், சோமசுந்தரம், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட சாரண செயலர் செல்வநாதன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img