fbpx
Homeபிற செய்திகள்அன்னூர் பேரூராட்சியில் ரூ.20 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஆ.ராசா எம்.பி.

அன்னூர் பேரூராட்சியில் ரூ.20 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஆ.ராசா எம்.பி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மூலதன மான்ய நிதித் திட்டம் மூலம் அன்னூர் பேரூராட்சி புதிய அலுவலக கட்டிடம் 1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான ஆ.இராசா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ரூபாய் 79 லட்சம் மதிப்பில் அன்னூர் பேரூராட்சிக்கு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளையும், ரூபாய் 26.50 இலட்சம் மதிப்பில் பேரூராட்சிக்கு புதிய துப்புரவு வாகனங்களையும் வழங்கினார்.

திமுக பொறியாளர் சங்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அன்னூர் பேரூராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அம்பாள் நந்தகுமார், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபால், மாவட்ட கவுன்சிலர் அன்னூர் ஆனந்தன், அறங்காவலர் குழு தலைவர் நடராஜ் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img