Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் சாரணர் இயக்க பயிற்சி முகாம்

சிதம்பரத்தில் சாரணர் இயக்க பயிற்சி முகாம்

சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் சாரண இயக்கத்தில்1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 10 வயதுக்குள்பட்ட குருளையர்கள், நீலப்பறவைர்களுக்கான மாநில விருது பயிற்சி முகாம்,தேர்வு முகாம் மற்றும் திருத்திய சோபான் முகாம் நடைபெற்றது.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற்றது. இதில் 5 பள்ளிகளைச் சேர்ந்த குருளையர்கள் 42 மாணவர்க ளும் நீலப்பறவையர் 21 மாணவிகளும் குருளையர் ஆசிரியர்கள் 6 பேர் நீலப்பறவையர் ஆசிரியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பயிற்சியாளரான சென்னையைச் சேர்ந்த வேணுகோபால், ஏ.இளையகுமார், என்.வேலாயுதம்,ஆர்.ஜெயந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
முகாமில் சாரண மாவட்டத்தின் தலைவர் எஸ்.குமார் தலைமை வகித்தார்.

சரசு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கவிதா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டர்.
ஆர்.ஜெயந்தி, டி.நரேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிறைவு விழாவுக்கு எஸ். குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட அமைப்பு ஆணையர் என்.வேலாயுதம் முகாமில் குருளையர் பிரிவு ஆணையர் கவிதா,நீலப்பறவையர் பிரிவு ஆணையர் கீதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாவட்ட சாரண செயலர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img