Homeபிற செய்திகள்முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 23-ஆம் ஆண்டு நினைவு நாள் கோவையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 23-ஆம் ஆண்டு நினைவு நாள் கோவையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான முரசொலி மாறனின் 23-ஆம் ஆண்டு நினைவு தினம் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறைந்த முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தீர்மானக்குழு இணைச் செயலாளர் நாச்சிமுத்து, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மாணவரணி மாநில துணைச்செயலாளர் கோகுல், பகுதிக்கழக செயலாளர்கள் டெம்போ சிவா, தேவசீலன், வழக்கறிஞர் சிவக்குமார், தொழிற்சங்கத் தலைவர்கள் பிரபாகர், சித்திக், அணி நிர்வாகிகள் லாரா, அக்ரி பாலு, துரை கதிரவன், சுரேஷ்குமார், முகமது ஜின்னா, மணி, மார்க்கெட் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் பிரவீன்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வராஜ், பனை அருண், கணேசன், மயில்சாமி, பிரின்ஸ், ராஜன், சாரமேடு இஸ்மாயில், ஆர்ஆர். மோகன், சுந்தர், சித்தாபுதூர் ரவி, சந்திரசேகரன், ஸ்டீபன் மற்றும் மாவட்ட அலுவலக பொறுப்பாளர் ஆர்எஸ்.புரம் பூபாலன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img