Homeபிற செய்திகள்50, 100 மீட்டர் ஓட்டத்தில் 2.5 வயது கோவை சிறுவன் உலக சாதனை

50, 100 மீட்டர் ஓட்டத்தில் 2.5 வயது கோவை சிறுவன் உலக சாதனை

கோவையைச் சேர்ந்த 2 வயது 5 மாத சிறுவன் தேவமித்ரன் 50 மீட்டர் ஓட்டத்தை 16 விநாடிகளிலும், 100 மீட்டர் ஓட்டத்தை 36 விநாடிகளிலும் கடந்து சாதனை படைத்துள்ளார். மேலும், 280 வார்த்தைகளை நினைவில் வைத்துக் கூறுதல் உள்ளிட்ட 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் & யாழினி தம்பதியின் மகனான தேவமித்ரனின் சாதனைகளை கிங்டம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
இதற்கிடையே அமைச்சர் சம்பத் குமார் சிறுவன் தேவமித்ரனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img