fbpx
Homeபிற செய்திகள்வனக்கல்லூரிக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் பாராட்டு

வனக்கல்லூரிக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் பாராட்டு

இந்திய வேளாண் காடுகள் அறிவியலார் சங்கம் (ஐ எஸ் ஏ எஃப்) மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை இணைந்து வேளாண் காடுகள் 2023க்கான சிறந்த நிறுவன விருதை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பிற்காக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் முனைவர்.அருணாச்சலம் முன்னிலையில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் (விரிவாக்கம்) கௌதம் இந்த விருதை தலைமை விருந்தினராக பங்கேற்றி வழங்கினார்.

இந்த விருதினை பெற்றமைக்காக கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img