Homeபிற செய்திகள்காட்டுமன்னார்கோவில் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடிநீள ராட்சத முதலை: தொழிலாளியை கடித்ததால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடிநீள ராட்சத முதலை: தொழிலாளியை கடித்ததால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே நேற்று அதிகாலை ஊருக்குள் புகுந்த முதலை கடித்ததில் தொழிலாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் வந்து முதலையை பிடித்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில் ராஜன் வாய்க்கால் உள்ளது.
இந்நிலையில் சுமார் 8 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் குடியிருப்புப் பகு திக்குள் புகுந்தது.


இதைப்பார்த்ததும் நாய்கள் குரைத்ததால் மக்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது கூலி தொழிலாளி ராஜேந்திரன் (44) என்பவரது வலது காலில் முதலை திடீரென கடித்தது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை அப்பகுதி மக்கள் முதலையிடமிருந்து மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் வனவர் பன்னீர்செல்வம், வனக் காப்பாளர்கள் ராம்குமார்,அன்புமணி ஆகியோர் ராட்ச முதலையை கயிறு கட்டி பிடித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள வக்கரமாரி ஏரியில் விட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img