fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் சட்டம் குறித்து சிறப்பு சொற்பொழிவு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் சட்டம் குறித்து சிறப்பு சொற்பொழிவு

கோவை, நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை, (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில் நேற்று காலை 9.30 மணிக்கு கேத்ரின் அரங்கில் சிறப்புச்சொற்பொழிவு நடைபெற்றது.கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், கல்லூ ரியின் முதல்வர் அருட் சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் ப.மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். கோவை வழக்குரைஞர் சோ.குருநந்திகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டம் குறித்த அடிப்படைத் தகவல்களை எடுத்துரைத்ததோடு மதுவில்லாத சமூகம் உருவாக வேண்டும் என்ற மனப்பான்மையையும், மாணவர்கள் பரந்துபட்ட மனப்பான்மையோடும் மனித நேயத்தோடும் வாழ வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.200க்கும் மேற்பட்ட மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவி யரின் ஐயங்களுக்கு அவர் தகுந்த பதில் அளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img