fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச் சூழல் மன்றங்கள் இணைந்து, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியினை, மாவட்ட கல்வி அலுவலர் ராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

இதில், பையூர் வேளாண் கல்லூரி பேராசிரியர் டாக்டர் கோவிந்தன், எலுமிச்சங்கிரி அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ் பாபு, சமூக வனவியல் மற்றும் விரிவாக்க அலுவலர் சிவகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ் உள்பட பலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதில், மாவட்டத்தின் 180 பள்ளிகளில் இருந்து, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, ஆற்றல் சேமிப்பு, காடுகள் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். கண்காட்சியை ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவியர் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img