fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட் டத்தில் போளூர் ஊராட்சி ஒன்றியம், சி.ரெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.127.08 லட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், தலை யாம்பள்ளம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.105.9 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறை கட்டிடங் களும், சு.வாழவெட்டி ஊராட் சியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ரூ.105.9 லட் சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராஜதாங்கல் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 85.44 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், வேடநத்தம் ஊராட் சியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ரூ. 63.54 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், தண் டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மலமஞ்சனூர் புதுர்ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூ. 42.72 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப் பறை கட்டிடங்களும், செங்கம் ஊராட்சி ஒன்றியம், அரட்டவாடி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 42.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங் களும், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மஷார் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 42.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங் களும், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், கொர்க்கை ஊராட் சியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ரூ. 127.08 லட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், போளுர் பேரூராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 56 லட்சம் மதிப் பீட்டில் அறிவியல் ஆய்வகம் கட்டிடத்தினையும் என பல பகுதிகளில் தமிழ்நாடு முதல மைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலையாம்பள்ளம் ஊராட்சியில் உள்ள புதிய அரசினர் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டு, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண் ணாமலை ஒன்றியக் குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் காளி தாஸ், ஆசிரியர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img