Homeபிற செய்திகள்காவல் நிலையத்துக்கு சுற்றுலா வந்த பள்ளி குழந்தைகள் - இனிப்புகள் கொடுத்து வரவேற்ற போலீசார்

காவல் நிலையத்துக்கு சுற்றுலா வந்த பள்ளி குழந்தைகள் – இனிப்புகள் கொடுத்து வரவேற்ற போலீசார்

காரமடை காவல் நிலையத்திற்கு சுற்றுலா வந்த பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்ற போலீசார், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு காவல் நிலையம் மற்றும் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் காரமடை காவல் நிலையத்திற்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி சுமார் 150 பள்ளி குழந்தைகள் காரமடை காவல் நிலையத்துக்கு இன்று பள்ளி பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

காவல் நிலையம் வந்த குழந்தைகளுக்கு போலீசார் கடலை மிட்டாய் கொடுத்து வரவேற்று உபசரித்தனர். பின்னர் காவல் நிலையத்தை குழந்தைகளுக்கு சுற்றி காண்பித்த போலீசார், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும், காவல் நிலையத்தில் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.

காவல் நிலையத்தை வியப்போடு சுற்றிப் பார்த்த மாணவர்களுக்கு சமூகத்தில் உள்ள குற்ற சம்பவங்கள் குறித்து விளக்கி கூறியதுடன் மாணவர்கள் குற்ற சம்பவங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நன்கு படித்து சமூகத்தில் நல்வழியில் செல்ல வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img