fbpx
Homeபிற செய்திகள்இந்திய சந்தையில் ZF விண்டு பவர் ஆலையின் முக்கிய மைல்கல் சாதனை

இந்திய சந்தையில் ZF விண்டு பவர் ஆலையின் முக்கிய மைல்கல் சாதனை

இந்தியாவின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள அதன் மிக நவீன உற்பத்தி ஆலையில், 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி என்ற மைல்கல் சாதனை படைத்துள்ளது ZF-விண்டு பவர். ZF-ன் இச்சாதனை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் செயற்பிரிவில் பொறுப்பு றுதிக்கு சான்றாக திகழ்கிறது.

சீனாவைத் தவிர்த்து பார்க்கையில், உலகில் காற்றாலைக்கான கியர்பாக்ஸ் உற்பத்திக்கு மிகப்பெரிய ஆலையாக கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள ZF விண்டு பவர் தொழிலகம் இருக்கிறது. இந்தியாவின் காற்றாலை மின் சக்தி செயல்தளத்தை மேம்படுத்தி உருவாக்குவதில் ZF ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

காற்றாலை மின்சக்தி சந்தையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி தேவையை எதிர்கொள்வதற்கு ஒரு ஆண்டுக்கு 9 GW ஆக இருக்கின்ற தனது உற் பத்தி திறனை 12 GW ஆக விரிவாக்கும் நோக்கத்திற்காக கோயம்புத்தூரிலுள்ள ZF விண்டு பவர் தொழிலகத்தில் நீண்டகால உத்தி அடிப்படையில், முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விரிவாக்கத்தோடு சேர்த்து 13 MW பரிசோதனைக்கான ரிக் இங்கு நிறுவப்பட்டிருப்பது, உருவாக் கம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதில் ஒரு சிறந்த பார்ட்னராக ZF-இன் அந்தஸ்த்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இது குறித்து ZF குழுமத்தின் நிர்வாக குழுவின் உறுப்பினரான புரொஃபசர் டாக்டர்.பீட்டர் லைய்யர் கூறியதாவது: இந்தியாவில் முன்னணி கியர் பாக்ஸ் சப்ளையராக ZF விண்டு பவர் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் இந்நாட்டின் காற்றாலை மின்சார உற்பத்தி திறனை இரண்டு மடங்காக உயர்த்துவது என்ற இந்தியாவின் மிகப்பெரிய குறிக்கோளை அடைவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் ZF குழுமத்தின் பிரசிடெண்ட் ஆகாஷ் பாஸ்ஸி கூறியதாவது: இந்த மைல்கல்லை வெற்றிகரமாக இயக்கியிருக்கும் இந்தியாவின் ஒரே தொழிலகமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்திய காற்றாலைக்கான கியர் பாக்ஸ் சந்தையில் தலை மைத்துவ நிலையை நாங்கள் தொடர்ந்து பராமரிப்பதற்கு எங்களை திறனுள்ளவர்களாக ஆக்கியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ZF விண்டு பவரின் தலைமை செயல் அதிகாரி பெலிக்ஸ் ஹென்செலர் கூறியதாவது: வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு மற்றும் உலகளாவிய உற்பத்தியில் நெகிழ்வுத்தன்மை மீதான எமது பொறுப்புறுதியாக ZF விண்டு பவர் தொழிலகத்தில் எமது முதலீடு திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்புத்தூர், ZF விண்டு பவர் தொழிலகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தீபக் பொஹெகர் கூறியதாவது:
வளர்ச்சியடைந்து வருகின்ற உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த தொழிலகத்தின் திறன், அதன் திறமையான பணியாளர்கள் குழுவின் அர்ப்பணிப்பால் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img