இந்தியாவின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே கிரடிட் கார்ட் வழங்குனரான எஸ்பிஐ (SBI) கார்ட், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்போரேஷன் ஆப் இந்தியா (NPCI)) இரண்டும் இணைந்து SBI உடனான ரூபே தளத்தில் ஷிஙிமி கார்டுகள் இணைக்கப்படுவதை அறிவித்தது.
SBI கார்ட் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ரூ பே கிரடிட் கார்டுகள் மூலமாக UPI பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
மூன்றாம் தரப்பினரின் UPIஆப்களில் கிரடிட் கார்டை பதிவு செய்து கொள்வதன் மூலமாக இந்த செயல்பாட்டை அவர்கள் மேற்கொள்ளலாம்.
எஸ்பிஐகார்டு, மேலாண்மை இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ராம மோகன் ராவ் அமாரா கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை நிறைவேறச் செய்யும் UPI ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் இயங்குதளமாக உருவெடுத்திருக்கிறது. நமது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு உதவும்.
இதன் விளைவாக ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கிரடிட் கார்ட் பயன்பாடு அதிகரிப்பதை இந்தத் துறை காணப்போகிறது என்றார்.
NPCI மேலாண்மை இயக்குநர் தலைமை செயலதிகாரியுமான திலீப் ஆஸ்பி கூறியதாவது: எந்த ஒரு தடையுமின்றி UPI தொகை செலுத்தல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த கூட்டாண்மை SBI ரூ பே கிரடிட் கார்டு உரிமையாளர்களுக்கு உதவும்.
நாட்டில் வளர்ந்து வரும் கிரடிட் கார்டுகளுக்கான தேவை காரணமாக ரூபே கிரடிட் கார்டுகளை வசதியான, அதிவிரைவான மற்றும்
பாதுகாப்பான UPI தளங்களோடு இணைப்பது போன்ற தொகை செலுத்தலுக்கான நூதனமான தீர்வுகளை கண்டறிந்து தொடர்ந்து மேம்படுத்துவது மிக அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது என்றார்.
செயல்பாட்டிலுள்ள அடிப்படை கார்டுகளை கார்டு உரிமையாளர்கள் UPI–ல் பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் அவர்களது கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி வர்த்தகர்களுக்கு பணத்தை செலுத்தலாம் .