‘ஜாகோ இந்தியா’ (JOGO India) தனது இருப்பை 5 தெற்கு நகரங்களில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறது.
ஜாகோ பான் இந்தியாவின் தொடக்கமானது, தமிழ்நாடு அரசின் நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நீரஜ் மிட்டல் தலை மையில் நடைபெற்றது.
மூத்த நரம்பியல் மற்றும் எமரிட்டஸ் பேராசிரியர் டாக்டர் ஏ.வி.சீனிவாசன், மூத்த சிறுநீரக மருத்துவ நிபுணர் மற்றும் எமரிட்டஸ் பேராசிரியர் டாக்டர் என்.ராஜமகேஸ்வரி, மூத்த நரம்பியல் நிபுணர் மற்றும் ஓய்வு பெற்ற எம்எம்சி இயக்குநர் டாக்டர் ஆர்.லட்சுமி நரசிம்மன், ஜாகோ பொது மேலாளர் மற்றும் இந்திய தலைவர் சார்லஸ் ஜேசுதாசன், ஜாகோ நிறுவனர் மற்றும் உலகளாவிய தலைமை செயல் அதிகாரி சஞ்சய் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சஞ்சய் முரளி கூறுகையில், “ஜாகோ இந்தியா பிப்ரவரி 2020 இல் சென்னையில் தொடங்கப்பட்டது, கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் கோயம்புத்தூர், மதுரை, பெங்களூர் மற்றும் திருவனந்தபுரத்தில் மையங்களை தொடங்கியுள்ளோம்.
இன்று, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறோம். எங்களின் விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக, 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 40 நகரங்களுக்கு சேவையை விரிவாக்கம் செய்து 100க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தெரபெட்டிக் மையங்களின் சங்கிலியாக மாற உள்ளோம்.
ஜாகோ ஹெல்த் பிரைவேட் லிமி டெட் என்பது அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் தெரபெட்டிக் நிறுவனமாகும். இது இடுப்பு தொடர்பான பாதிப்புகளான மலம் மற்றும் சிறுநீர் அடங்காமை (மன அழுத்தம், கலப்பு மற்றும் உந்துதல்) மற்றும் இடுப்பு உறுப்பு பாதிப்பு போன்ற பல்வேறு நரம்பு-தசை நோய்களுக்கு சிகிச்சையளிக்க நியூரோபிளாஸ்டிசிட்டியை எளிதாக்கு கிறது என்றார்.