fbpx
Homeபிற செய்திகள்உயர்கல்வியில் சிறந்த பங்களிப்பு: சவீதா பல் மருத்துவ கல்லூரிக்கு விருது

உயர்கல்வியில் சிறந்த பங்களிப்பு: சவீதா பல் மருத்துவ கல்லூரிக்கு விருது

உயர்கல்வியில் சிறந்த பங்களிப்புக்காக சவீதா பல் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கு, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ.) விருது வழங்கி பாராட்டியுள்ளது.

எப்.ஐ.சி.சி.ஐ. மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து, சிறப்புமிக்க உயர்கல்வித்துறை மாநாடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் அண்மையில் நடத்தின.

எப்.ஐ.சி.சி.ஐ. தலைவர் ஜி.எஸ்.கே. வேலு தொடக்க உரையாற்றினார். எப்.ஐ.சி.சி.ஐ. தமிழ்நாடு கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் அசோக் வர்கீஸ், மாநாட்டின் கருப்பொருள் குறித்து பேசினார்.

இதில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 25 விருதுகளை வழங்கினார். இந்த விருதுகளில் உயர்கல்வியில் சிறந்த பல்மருத்துவ கல்லூரிக்கான விருதை சவீதா பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img