சென்னை சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் சைட் ஸ்பெக்ட்ரம் நிறுவனம் சார்பில் சமீபத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் சைட் ஸ்பெக்ட்ரம், தரவு பகுப்பாய்வில் புதுமை மற்றும் நிபுணத்துவத்தை வளர்க்கும் விதமாக வாய்ப்பை ஏற்படுத்தியது.
நேர்காணல்கள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் குழு விவாதங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான சுற்றுகள் மூலம் அவர்களின் அறிவு, தொழில்நுட்ப திறன்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன்கள் ஆகியவை குறித்து பரிசோதிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்பெக்ட்ரம் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு தலைவர் கூறுகையில், சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி பட்டதாரிகளின் திறமை மற்றும் ஆர்வத்தால் நாங்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டோம்.
அவர்களின் பொறியியல் பின்னணி, பகுப்பாய்வு புத்திசாலித்தனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரவு பகுப்பாய்வு தீர்வுகளை வழங்குவோம் என்றார்.