மணிப்பூரில் நடைபெற்று வரும் பழங்குடி மற்றும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் கலவரத்தை தூண்டிவிடும் மணிப்பூர் பாஜக அரசை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி. தலைவர் பேரூர் மயில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் விஜயகுமார், எஸ்.சி.எஸ்.டி. மாநிலத்துணைத்தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் கலந்து கொண்டு பேசும் போது, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து நிறுத்த மத்திய மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.இல்லையென்றால் மணிப்பூர் அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சி உடனடியாக அமுல்படுத்தி மக்களுக்கு நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் நகர தலைவர் தங்கமணி கோவை வடக்கு, மாவட்ட நிர்வாகிகள் சத்தியவதி கணேஷ் மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி சுடர்விழி பொதுச் செயலாளர் ரஹமத்துல்லாஹ், மீனாஹரி ராமலிங்கம்,, சக்தி சதீஷ் வி எம் ரங்கசாமி பெல்லாதி சம்பத் சத்தியநாராயணன் ஜெயபால் பெருமாள் சாமி முருகவேல்,ரகுராமன் தங்கராஜ் சுந்தரராஜ் வெள்ளிங்கிரி கந்தசாமி பாலாஜி குணசேகரன் இந்திரா மரியம் பிவி மனோகர் ராஜ் வெள்ளிங்கிரி அருள் அந்தோணி கருப்புசாமி சரவணகுமார் சுப்பிரமணி,வட்டார தலைவர் ராஜேந்திரன் ,எஸ்.சி.எஸ்.டி நகர தலைவர் பத்திரசாமி, கணேஷ், சுடர்மணி, இந்திரனி, பத்திரன், ஜான், சுந்தரராஜன், சிவா, முரளி, சிந்தியாகு, அப்பாஸ் ஷெரிப், விஜயன், ரங்கசாமி, ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.