ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM) இயக்குநர் டாக்டர் பி.அல்லி ராணி நவம்பர் 14 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை அறிவித்தார்.
இதில் அவர் கூறியதாவது:
SVPISTM கல்லூரி மதிப்புமிக்க இந்தியா டுடே-ன் MDRA சிறந்த வணிகப் பள்ளி கணக்கெடுப்பில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜவுளி மற்றும் ஜவுளி மேலாண்மைக் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த B -ஸ்கூல்களில் SVPISTM மட்டுமே ஒரே கல்லூரியாக இருப்பதால் இந்த தரவரிசை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகளுடன் போட்டியிடும் இந்நிறுவனத்தின் நிலைப்பாடு அதன் சிறப்பு பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஜவுளி மேலாண்மைத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு சான்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்
இதில், டாக்டர் எம். வெங்கடலட்சுமி (HoD, School of Management) மற்றும் டாக்டர் பிஸ்வரஞ்சன் கோஷ் (HoD, School of Textiles) ஆகியோர் கலந்து கொண்டனர்.