கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வணிக கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனைவர் மா.ஜெகன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், குழந்தைகள் நலன் பாதுகாப்பு உறுதி மொழியான தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தை நேய செயல்பாடுகளிலும் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தை திருமணம் இள வயது பிரச்சனை, பாலியல் வன்முறை, கல்லூரி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டால் குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் அனைவரும் ஈடுபட வேண்டும். அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்த வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் மனவளர்ச்சி குன்றிய ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும்.
குழந்தைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வதன் பொருட்டு 181, 1098 என்ற காவல்துறைக்கு தகவல் கொடுத்தல் வேண்டும். மேலும் குழந்தை நேய சமூகத்தை இணைந்து அனைவரும் உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழி கூற அதனை அனைத்து பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி நிகழ்வினை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரான வேதியியல் துறையின் உதவி பேராசிரியர் கே.இராமமூர்த்தி ஆங்கிலத் துறையின் உதவி பேராசிரியர் இரா.சரவணகுமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியாக தாவரவியல் துறையின் உதவிப் பேராசிரியரும் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலருமான இரா. இராமமூர்த்தி நன்றி கூறினார்.