சாம்சங், விழாக்கால விற்பனையின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சிகளில் மெகா டீல் களை வெளியிட்டுள்ளது.
நியோ கியூஎல்இடி, கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் டிவி, கிரிஸ்டல் விசன் 4கே டிவி, கியூஎல்இடி 4கே டிவி, தி பிரேம் டிவி இன்னும் பலவற்றை உள்ளடக்கிய சாம்சங்-இன் தொலைக்காட்சி வரம்பில் வீட்டிற்குப் புதியவற்றைக் கொண்டு வரவும், லிவிங் ஸ்பேசை ஸ்டைலை வழங்கவும் பண்டிகைக் காலம் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
‘தொலைக்காட்சிகளில் அற்புதமான சலுகைகள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இந்த பண்டிகை மகிழ்ச்சியை அதிகரிக்க கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தனித்துவமான சலுகைகள் இந்த பண்டிகைக் காலத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கும் என்று நம்புகிறோம்’ என்றார் சாம்சங் இந்தியாவின் விஷூவல் டிஸ்ப்ளே வணிகத்தின் மூத்த துணைத்தலைவர் மோகன்தீப் சிங்.
நுகர்வோர்கள் 20 சதம் வரை வங்கி கேஷ்பேக், 3-வருட வாரண்டி மற்றும் எளிதான இஎம்ஐ தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பதையும் அனுபவிக்கலாம்.
முக்கியமாக ஆன்லைன் சலுகைகளாக வாடிக்கையாளர்கள் 4000 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம் மற்றும் 18 மாதங்கள் வரை எளிதான இஎம்ஐ விருப்பங்களைப் பெறலாம் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.