கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய குழந்தைகள் மையக் கட்டடத்தை, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மையத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளைக் கொண்டு திறந்து வைத்து இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.
கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.19.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் மையம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“குழந்தைகள் மையத்தில் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சுகாதார மாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
இயற்கையாக குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றார் போல் கலை ஓவியங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கற்றலை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் வசதியுடன் கூடிய எல்.இ.டி.டி.வி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்து தங்கள் குழந்தைகளை அருகில் இருந்து பார்த்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறேன்” என்றார் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற் பொறியாளர் இளஞ்சேரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் குறள்செல்வி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.