fbpx
Homeபிற செய்திகள்‘குழந்தைகள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது’ தமிழகத்தில் 2 மாவட்டங்களில் புத்தகம் வெளியீடு

‘குழந்தைகள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது’ தமிழகத்தில் 2 மாவட்டங்களில் புத்தகம் வெளியீடு

இந்தியாவில் லட்சக்கணக்கான மைனர் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தை திருமணத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்பது என்பது ஒரு பெரிய கனவாகவே உள்ளது. அதை மாற்றும் வகையில் புதிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2030-ம் ஆண்டுக்குள் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்குவது எப்படி என்பது பற்றிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர் புவன் ரிபு எழுதியுள்ள ‘குழந்தைகள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது, குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குறிப்பு’ என்னும் அந்த புத்தகம் இந்த நேரத்தில் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் நடைபெற்று வரும் குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் புவன் ரிபு, ஒரு குழந்தை உரிமை ஆர்வலர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர்.

ஆசிரியர் புவன் ரிபு கூறுகையில், ‘இனி இது வேண்டாம்’ என்ற உறுதியுடன் கூடிய அவசரம் தேவை. இதுபோன்ற சம்பவங்களாலேயே குழந்தைகள் விற்கப்படுவது, பலாத்காரம் செய்யப்படுவது, தொலைந்து போவது ஆகியவை நிகழ்கின்றன’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img