சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 66-வது வரவேற்பு நாள் விழா ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது.
சென்னை அசோக் லேலண்ட் இன்டர்நேஷனல் ஆப்பரேசன் மற்றும் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் டிபென்ஸ் மற்றும் பவர் சொல்யூ ஷன்ஸ் ராஜேஷ், பெங்களூர் ஓலா எலக்ட்ரிக், கார்ப்பரேட் அபையர்ஸ் துணைத் தலைவர் தத்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் வி.கார்த்திகேயன் பேசும்போது, TPT யில் உலகத்தரத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான Skills Certification Courses கற்பிக்கபட்டு மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு உருவாக்குகிறது.
NIRF Innovation Ranking 2023-ல் 151-300 தரப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே பாலிடெக்னிக் கல்லூரி தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி.
மாணவர்களின் கல்வி தடையின்றி தொடர பலவேறு கல்வி உதவித்தொகைகளை மத்திய மாநில மற்றும் தொழில் நிறுவனங்களில் மூலமாக பெற்று தருவதில் மிகச்சிறந்த முன்னோடியாக திகழ்ந்து. அதன் முத்தாய்ப்பாக 2023 – 2024-ம் கல்வி ஆண்டில் 147 இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு ரூ.73.5 லட்சம் AICTE பிரகதி கல்வி உதவித்தொகையினை பெற்றுத் தந்துள்ளோம்.
கடந்த வருடம் கேமரூன், அசோக் லேலண்ட், ஓலா எலக்ட்ரிக், டாட்டா ப்ராஜக்ட், டைட்டன்,விப்ரோ, இன்போசிஸ் போன்ற 112 முன்னணி நிறுவனங்களில் 460 மாணவ, மாணவிகள் பணியில் சேர்ந்துள்ளனர்.
இத்தகு வாய்ப்புகளை அள்ளித்தரும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயில வந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் இக்கல்லூரியின் வைரங்களாக மிளிருவார்கள் என்றார்.
கல்லூரி தலைவர் தசொ.வள்ளியப்பா தலைமை தாங்கி பேசும்போது, தென்னிந்தியாவிலேயே தொழிற்கல்வியில் பெண்களுக்கு முதன்முதலாக 1976-ல் சேர்க்கை வழங்கி பெண் கல்விச்சேவையில் முன்னோடியாக தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி திகழ்கிறது.
இக்கல்லூரியில் பயின்ற 18 மாணவ மாணவியருக்கு Ashok Leyland நிறுவனத்தில் இன்று பணி நியமனத்துக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் இக்கல்லூரியிலுள்ள நவீனதொழில்நுட்ப வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தி, கல்லூரிக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத் தந்து தங்கள் வாழ்வில் ஒளி வீசி வளர்ந்திட வேண்டும் என்றார்.
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி இந்திய அளவில் NIRF Innovation Ranking 2023- -ல் இடம் பெற்றமைக்கு மற்றும் TPT Center for Civil Testing and Constancy சர்வதேச NABL தரச்சான்று பெற்றமைக்கு கல்லூரியின் முதல்வர் டி.கார்த்திகேயன், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்லூரி தலைவர் சொ.வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா பாராட்டினர்.