fbpx
Homeபிற செய்திகள்‘நியோ 7 புரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

‘நியோ 7 புரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

நியோ 6 மற்றும் நியோ 7 வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த வரிசையில் புதிதாக அதிக செயல்திறன் கொண்ட நியோ 7 புரோ ஸ்மார்ட்போனை ஐக்யூஓஓ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

‘பவர் டூ வின்’ என்ற உறுதிமொழியுடன், இந்த ஸ்மார்ட்போன் இணையற்ற கேமிங் அனுபவத்துடன் முதன்மை செயல்திறனின் அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் உள்ளது, சிறந்த தொழில்நுட்பம், வேகமான செயல்பாடு ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ.31,999. இதற்கான முன் பதிவு அமேசான்.இன் மற்றும் ஐக்யூஓஓ இ–ஸ்டோரில் துவங்கி உள்ளது. நியோ 7 புரோவை முன் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு நீட்டிக் கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படும்.

இதன் விற்பனை வரும் 15-ம் தேதி முதல் துவங்க உள்ளது. ஐக்யூஓஓ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா கூறியதாவது:
இளம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வகையில் ஸ்மார்ட்போன்களில் ஒப்பிடமுடியாத செயல்திறன், கேமிங் திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

எப்போதும் பயணத்தில் இருக்கும் மற்றும் பிரீமியம் அனுபவத்துடன் அதிக செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப புதிய நியோ 7 புரோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

நியோ 7 புரோ அதிக செயல்திறன், இணையற்ற கேமிங் திறன்கள், அற்புதமான வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பமிக்க கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய நியோ 7 புரோவும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img