fbpx
Homeதலையங்கம்பெரியார் பல்கலைக்கழகமே பெரியாரை அவமதிப்பதா?

பெரியார் பல்கலைக்கழகமே பெரியாரை அவமதிப்பதா?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இதழியல் துறை இணைப் பேராசிரியரான இரா.சுப்பிரமணி, அங்குள்ள கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சமீபத்தில் இவரை, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது. தந்தை பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது.
இந்த நூலை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் இரா.சுப்பிர மணிக்கு நோட்டீஸ் வழங்கியது.

கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாச்சார தன்மையுடைய விவகாரங்களுக்கு, எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது.

ஆனால், பெரியார் குறித்த புத்தகம் எழுதிய தற்காக பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி” நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததோடு, அன்றைய நாளில் சமூகநீதியைக் கடைப்பிடிப்போம் என்று அரசுப் பணியாளர்கள் உறுதிமொழியை எடுக்கவேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு இது தெரியாமலா இருக்கும்?

பெரியார் பெயரில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தில் பெரியார் பற்றி நூல் எழுதக் கூடாது என்று கூறுவதை விட வேறு கேலிக் கூத்து என்னவாக இருக்க முடியும்? இது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

எனவே புத்தகம் எழுதிய பேராசிரியர் இரா.சுப்பிரமணி மீதான நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்த துணைவேந்தர் மீது நடவடிக்கை பாய வேண்டும்.

இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வித்துறை மூலம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ற கேள்வி தமிழ்நாட்டில் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது!

படிக்க வேண்டும்

spot_img