கோவை – திருச்சி சாலையில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில் ஆரம்ப நிலை புற்றுநோய்களை கண்டறியும் நவீன கருவிகளும், அவற்றை வெற்றிகரமாக அகற்றும் மருத்துவ குழுவினரும் உள்ளதாக டாக்டர் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: உணவுக் குழாய், இரைப்பை, பெருங்குடல், சிறு குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் கேன்ஸ்சர் கட்டிகளை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கு அதிநவீன எண்டாஸ்கோபி உபகரணங்கள் உதவுகின்றன. இந்த நவின கருவிகள் வசதி இங்கு உள்ளது.
இதன்மூலம் பையாப்ஸி இல்லாமலேயே இது கேன்சர் தானா என்பதை 90 சதவீதம் உறுதியாக கண்டறிய முடியும். வி.ஜி.எம்.ஜீரண நல உயர் மையத்தில் எண்டோஸ்கோபி மூலம் 35,315 மற்றும் கொலொனோஸ்கோபி மூலம் 225 ஆரம்பநிலை புற்றுநோய்கள் கண்டறிந்துள்ளோம்.
இங்கு அதிநவீன மருத்துவர் கருவிகள் மற்றும் இரைப்பை, குடல் மருத்துவர்கள் 6 பேர், ஒரு கல்லீரல் மருத்துவர் குழுவினர் உள்ளனர் என்றார்.



