fbpx
Homeபிற செய்திகள்தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி

தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி

கோவை தொண்டாமுத் தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களின் களப் பயணம் நடைபெற்றது.
இக்களப்பயணத்தில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளியிலிருந்தும் நரசிபுரம் அரசு பள்ளியிலிருந்தும் சுமார் 30 மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் துறைத் தலைவர்கள் உரை நிகழ்த்தினர். அவர்கள், “தங்கள் துறையில் உள்ள வேலை வாய்ப்பினையும் அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் கல்விசார் உதவித்தொகை, சேர்க்கை இட ஒதுக்கீடு மற்றும் பிற வசதிகள்” குறித்து பேசினர்.

உயர்கல்வியின் முக்கியத் துவத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேன் டும் என்பதை பள்ளி மாணவர்களிடையே புரி தலை உருவாக்கினர். அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூ ரிகளில் பயின்று பல்வேறு துறைகளில் உயர் பதவியில் வகித்தவர்கள் குறித்து பேசினர்.

கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்வில், தொண்டா முத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.ரமேஷ்,
‘நான் முதல்வன்’ திட்டத் தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.பிருந்தா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மா.ருகன் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைசார்ந்த ஆசிரியர் பெருமக்களும் நாட்டு நலப்பணி திட்டத் தின் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img