fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்டத்தில் இளைய தலைமுறையினருக்கான ஆரோக்கிய திட்டங்கள் : கலெக்டர் நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் இளைய தலைமுறையினருக்கான ஆரோக்கிய திட்டங்கள் : கலெக்டர் நேரில் ஆய்வு

ஆரோக்கியமான கிராம சமுதாயத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகளவில் விளையாட்டு வீரர்களை உரு வாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

`இதனால் இளைய தலைமுறையினருக்கு எதிர் காலத்தில் மருத்துவமனை களுக்கு செல்ல வேண்டிய தேவைகள் குறைவாகவும், ஆரோக்கியமான சமுதாயத்தை அடைய வழிவகுப்பதோடு எவ்வித பாகு பாடுமின்றி அனைவரையும் ஒருங்கிணைக்கும் மையமாக விளையாட்டு திகழ்கிறது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ஊரக விளையாட்டு மைதானப்பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு சங் கங்கள் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊரக விளையாட்டு மைதானத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மைதானம் தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர்.

மைதானம் சமன்படுத்தும் பணிகள்

குறிப்பாக, இம் மைதானம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக்கில் நடைமேடை, நடைபாதை, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்,ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் மைதானம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாணவ, மாணவியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். வகுப்பறையில் விளையாட்டிற்கென ஒதுக்கப்ப டும் நேரத்தினை மாணவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும்.

விளையாட்டு போட்டிகள் மிகச் சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும், இருவேலையும் விளையாடுவதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு கலெக்டர் செ.கார்மேகம் தெரிவித்தார்.

ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர், வாழப்பாடி வட்டாட்சியர், அட்மா குழுத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img