துபாயில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற இந்தியா – துபாய் நாடுகளுக்கு இடையிலான சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யிரிஜிசி அகாடமி தலைவர் ஷிஹான். சிரில் வினோத் தலைமையில் மாணவர்கள் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 9 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் பெற்றனர்.
துபாய் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்கள், தங்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் கோவை மாவட்டத்திற்கும், தங்கள் பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள இளம் விளையாட்டு வீரர்களின் திறமையை சக மாணவர்களும் பெற்றோர்களும் வாழ்த்தி வரவேற்றனர்.
மாணவர்களின் வெற்றிப் பட்டியல்
(கராத்தே):
- சுவஸ்திக் – கட்டா பிரிவில் முதலிடம்- சண்டை பிரிவில் இரண்டாமிடம்.
- ஸ்ரீசரா – கட்டா பிரிவில் முதலிடம்- சண்டை பிரிவில் இரண்டாமிடம்.
- இனியா – கட்டா பிரிவில் இரண்டாமிடம்- சண்டை பிரிவில் இரண்டாமிடம்.
- ஆராதனா – கட்டா பிரிவில் முதலிடம் – சண்டை பிரிவில் மூன்றாமிடம்.
- ஜோஷிஹா ஸ்ரீ – கட்டா பிரிவில் இரண்டாமிடம்.
- ஜெஸ்லி – கட்டா பிரிவில் முதலிடம்.
- ஜசீனா தஸ்னீம் – கட்டா பிரிவில்- முதலிடம்.
- மன்ஹா ஷிரீன்- கட்டா பிரிவில் – இரண்டாமிடம்.
- ராம் ஈஸ்வர் – கட்டா பிரிவில் இரண்டாமிடம், – சண்டை பிரிவில் முதலிடம்.
- பிரத்யுமன் – கட்டா பிரிவில் இரண்டாமிடம், – சண்டை பிரிவில் முதலிடம்.
- கோகுல கிருஷ்ணன் – கட்டா பிரிவில் மூன்றாமிடம் – சண்டை பிரிவில் முதலிடம்.
சிலம்பம்: - தேவி பாரதி – முதலிடம் (ஒற்றை கம்பு).



