கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனமானது, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (ஐ.எஸ்.எம்.ஏ.) நிதியுதவியுடன் அதிக மகசூல், அதிக சர்க்கரை சத்து, கால நிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய கரும்பு ரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 27ம் தேதி அன்று கை யெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஐ.எஸ்.எம்.ஏ. தலைவர் ஆதித்ய ஜுன்ஜுன்வாலா பேசுகையில், ரூ.7.5 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், நாடு முழு வதும் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய, அதிக மகசூல் ரகங்களை கண்டறிய உதவும். நம் நாட்டில் கரும்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுக்கான முதலீடு மிக குறைவு.
நாட்டின் சர்க்கரை மற்றும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்திட்டம், இந்திய சர்க்கரைத் துறைக்கு பெரிதும் உதவும் என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில், கரும்பு இனப்பெருக்க நிறுவனம், ஐ.எஸ்.எம்.ஏ.வை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.