கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2026-27-ம் ஆண்டிற்கான அரவை பருவம் குறித்து கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆலையின் செயலாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார், தலைமை ரசாயனர் செல்வேந்திரன்,தொழிலாளர் நல அலுவலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாயிகள், நோய் பாதிக்கும் கரும்புகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். கரும்புகளை ஆலைக்கு அனுப்பிய 15 நாட்களில் கரும்புக் கான பணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத் தனர். இதையடுத்து ஆலையின் செயலாட்சியர் செந்தில் அரசன் பேசுகையில், வருகிற டிசம்பர் 10-ந்தேதி கரும்பு அரவை பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். மேலும் விவசாயிகளுக்கு தீபாவளிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும். வேறு சர்க்கரை ஆலையிலிருந்து 30 ஆயிரம் டன் கரும்பு எடுப்பதற்கு சர்க்கரைத்துறை மற்றும் அமைச்சர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இதில் விவசாய சங்க நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், குஞ்சிதபாதம் பிள்ளை, அண்ணா துரை. அப்பாதுரை, திருபால், ஆண்டவர் செல்வம், ஏ.எம்.மதியழகன், அப்பா ரவிக்குமார். சிவக்குமார், வேல்முருகன்,வெற்றிவேல் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர் முடிவில் கரும்பு பெருக்கு அலுவலர் (பொறுப்பு) மோகன் நன்றி கூறினார்.



