சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான ஸ்கூட், “ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன்” விருதை, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வென்றுள்ளது.
பாரிஸில் கடந்த 20ம்தேதி நடந்த விமான கண்காட்சியில்,
“குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர விமான சேவை வழங்கும் நிறுவனம்” என்ற சிறப்புக்காக இந்த விருதை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஸ்கூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, லெஸ்லி த்ங் கூறியதாவது: ஸ்கைட்ராக்ஸ் ஆல் மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இந்த விருது, எங் கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை, வேறுபட்ட திட்டங்கள், அதிநவீன அனுபவங்கள் மற்றும் சிறந்த மதிப்பு ஆகியவற்றை தொடர்ந்து வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாக இருக்கிறது.
தடையற்ற வாடிக்கையாளர் பயணம் மற்றும் அனுபவத்தை வழங்க முன்னணியில் மட்டுமின்றி பின்புலத்திலும் ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கும் எங்கள் ஊழியர்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.
முன்னோக்கிப் பார்க்கும்போது, குறைந்த கட்டண பயணத்துக்கான தரத் தை உயர்த்துவதற்கு நாங்கள் தொடர்ந்து வழி வகுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள், விமானத் துறையின் ஆஸ்கார் விருதுகளாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.