Homeபிற செய்திகள்வாளையார் பகுதியில் பனிமூட்டம்: முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள்

வாளையார் பகுதியில் பனிமூட்டம்: முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள்

கோவை மாவட்டத் தில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்தது, அதனைத் தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
அதேசமயம் குளிர் காலமும் துவங்கியதால் பொதுமக்கள் ஸ்வட்டர் உள்ளிட்ட கதகதப்பான ஆடைகளை அணிந்து கொள்கின்றனர்.
அதே சமயம் அதிகாலை அதிகளவு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்ட வண்ணம் பயணம் மேற்கொள்கின்றனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் என பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கேரள மாநில எல்லை பகுதியான வாளையார் பகுதியில் இன்று அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட சரியாக தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் மிகவும் மெதுவாக வாகனங்களை கவனத்துடன் இயக்கி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img