fbpx
Homeபிற செய்திகள்சிறப்பு சுருக்கமுறை திருத்த வரை வாக்குச்சாவடிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்டார்

சிறப்பு சுருக்கமுறை திருத்த வரை வாக்குச்சாவடிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்டார்

2024-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேற்று (ஆக.25) வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சியர் பேசிய தாவது:
சேலம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக் காளர் பட்டியல் 05.01.2023 அன்று வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,247 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலில் 14,73,024 ஆண் வாக்காளர்களும், 14,87,294 பெண் வாக்காளர்களும், 275 இதர வாக்காளர்களும் என மொத்தம் 29,60,593 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின்படி 1,500 வாக்கா ளர்களுக்கு அதிகமான வாக் காளர்கள் கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், இடமாற்றம், கட்டிட மாற்றம் போன்ற இனங்களை சீரமைப்பு (ஸிணீtவீஷீஸீணீறீவீsணீtவீஷீஸீ) பணிகள் தொடர்பான உத்தேச மாறுதல்கள் செய்ய பரிந்துரை செய்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

உத்தேச மாறுதல் பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இது தொடர்பான ஆலோசனைகள் அல்லது புதிய கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிலோ அல்லது சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ வரும் 31-ம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.

பெறப்படும் கோரிக்கைகளின் பேரில் இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2024-ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 17.10.2023 அன்று வெளியிடப்பட உள்ளது.

அதன்படி 17.10.2023 முதல் 30.11.2023 வரை வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணிகளுக்கான படி வங்கள் பெற்று நடவடிக்கை மேற் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 5.01.2024 அன்று வெளியிடப்பட உள்ளது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடர்பாக வரும் 4.11.2023,5.11.2023, 18.11.2023, 19.11.2023 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு தகவல் தெரிவித்து நாளது தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டவர்கள், இளம் வாக் காளர்களை வாக்காளர் பட்டி யலில் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img