fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியில் ‘பூமி’ உடன் இணைந்த ‘ஸ்விக்கி’

தூய்மைப் பணியில் ‘பூமி’ உடன் இணைந்த ‘ஸ்விக்கி’

ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண் டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, நகரின் தூய்மை மற்றும் பசுமை பணியில் பூமி சமூக தொண்டு நிறுவனத்துடன் ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி இணைந்து எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டது.

ஸ்விக்கியின் சென்னை குழுவைச் சேர்ந்த 100 டெலிவரி பங்குதாரர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். எலியட்ஸ் கடற்கரையில் நடந்த இந்த தூய்மைப் பணியில் பங்கேற்ற இவர்கள் அங்கு கிடந்த குப்பையை சேகரித்து அவற்றில் மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து அவற்றை உள்ளூர் நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.

சென்னை தின கொண்டாட்டங்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்விக்கி உண வுத் திருவிழாவை அறிமுகப் படுத்தி உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு துவக்கப்பட்டது ஸ்விக்கி.

இது இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங் களில் உள்ள 2,80,000 உண வகங்களுடன் நுகர்வோரை இணைக்கிறது. இந்தியா முழுவதும் 25 நகரங்களில் ‘டைன் அவுட்’ என்னும் திட்டத் தையும் அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய உணவகங்களுக்கு சென்று சாப்பிடும்போது அவர் களுக்கு தள்ளுபடியும். வழங்கப்படுகிறது.

டெலிவரி நிர்வாகிகளால் வழங்கப்படும் ஒவ்வொரு ஆர்டரும், மின்னல் வேக டெலிவரி, நேரலை ஆர்டர் கண் காணிப்பு மற்றும் 24/7 வாடிக்கையாளர் சேவை போன்ற வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அனைத்து அம்சங்களையும் தீவிரமாக கண்காணித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img