சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி (TPT) அலுமினி ஆடிட்டோரியத் தின் (TPT Alumni Auditorium) கிரகப்பி ரவேசம் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது,
கல்லூரி தலைவர் சி.வள்ளியப்பா தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் சொக்கு வள்ளியப்பா, முதல்வர் முனைவர் வீ.கார்த் திகேயன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரி தலைவர் சி.வள்ளியப்பா பேசும்போது, டிபிடி அலுமினி ஆடிட்டோரியம், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்த 600 பேர் அமரக்கூடிய வகையில், அலங்கார மின்விளக்குகள், இருக்கைகள் மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கமாக வடிவமைக்கப்பட்டு கட்டப் பட்டுள்ளது என்றார்.
இக்கலையரங்கத்தை மிகவும் சிறப்பான முறையில் வடிவமைத்த, மும்பையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கல்லூரி நிர்வாகமும், முன்னாள் மாணவர்களும் இணைந்து கட்டமைத்த மிக பிரம்மாண்டமான இக்கலையரங்கம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் முன் னோடி என்று கல்லூரியின் முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவல ருமான முனைவர்.வீ.கார்த்திகேயன் ஆகி யோர் தெரிவித்தனர்.
நவீன வசதிகளுடன் இக்கலையரங்கத்தை சிறப்பாக கட்டமைத்த, கல்லூரி தலைவர் சி.வள்ளியப்பா துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, தாராளமாக பங்களிப்புகளை வழங்கிய முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.