வென்ச்சர் கேப்பிட்டல் நிதியுதவியுடன் தொடங்கப் பட்ட மின்சார வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான விங்ஸ் இவி (Wings EV), அதன் முதன்மை தயாரிப்பான ‘ராபின்’ வாகனத்திற்கு சிறந்த தயாரிப்பு விருது கிடைத்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற மைக் ரோமொபிலிட்டி யூரோப் மாநாட்டில் ‘NEVs, மொபெட்கள் மற்றும் பைக்குகள்’ வகையினத்தில் அதன் முக்கியத் தயா ரிப்பான ‘ராபின்’ வாகனத்திற்காக இவ்விருதினை பெற்றிருக்கிறது.
இந்தூர் மற்றும் பெங்களூருவில் தயாரிப்பு தொழிலகங்களை கொண்டிருக்கும் விங்ஸ் இவி, இம்மாநாடு நிகழ்வின்போது அதன் தனித்துவமான எலக்ட்ரிக் மைக்ரோகார் “ராபின்”என்பதனை உலகளவில் முதன் முறையாக அறிமுகம் செய்தது. விங்ஸ் இவி – ன் ராபின், இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.
“நகரங்களுக்கான மிகச்சிறந்த வாகனம்”
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் இது விற்பனைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. “நகரங்களுக்கான மிகச்சிறந்த வாகனம்” என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ராபின், ஒரு மோட்டார் பைக்கின் நீள, அகலத்துடன் கச்சிதமான அளவுள்ள முற்றிலுமாக மூடப்பட்ட கட்டமைப்பு இரு இருக்கைகள் மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு மின்சார வாகனமாகும்.
விங்ஸ் இவி நிறுவனத்தின் இணை நிறுவனம் மற்றும் தலைமை செயல் அலுவலர் பிரணவ் தன்டேகர் கூறியதாவது: முதல் தயாரிப்பான ராபின் வாகனத்திற்கு கௌரவமிக்க இவ்விருதை பெறுவது கௌரவமாகும். உலகத் தரத்திலான 60 பிற தயாரிப்புகளோடு போட்டியிட்டதன் மூலம் வென்றிருக்கும் இவ்விருது, விங்ஸ் இவி -ல் பணியாற்றும் அனைவரின் திறன் மற்றும் கடும் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்றார்.