கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 1க்கு உட்பட்ட அப்பநாயக்கன்பாளையம், கலைஞர் நகர் பகுதியில் பொதுவிநியோகக் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை மேயர் ரங்கநாயகி ராமச் சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட் சியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதையும், குடிநீர் வசதி தேவைப்படும் குடி யிருப்புப் பகுதிகளுக்கு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 1-க்கு உட்பட்ட அப்பநாயக்கன்பாளையம், கலைஞர் நகர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 3 பொதுவிநியோகக் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கற்பகம், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி நகர திட்டமிடுனர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், ஜெயின்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



