
கோவை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலய ஞாயிறு பள்ளி சார்பாக, மாணவர்களின் கலைத்திறன் மற்றும் விவிலிய அறிவை வெளிப்படுத்தும் விதமாக ராக் எக்ஸ்போ 2.0 என்ற சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலய ஆயர் சற்குணம் பார்வையிட்டார்.

ஆலய வளாகத்தில் உள்ள புதிய பிரார்த்தனை கூடத்தின் முதல் தளத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், ஞாயிறு பள்ளி சிறுவர், சிறுமியர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்தக் கண்காட்சி நிலம், நீர், நெருப்பு, காற்று, உண்மை ஆகிய 5 கருப்பொருள்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் கைகளால் உருவாக்கிய கலங்கரை விளக்கம், உடன்படிக்கைப் பெட்டி, திராட்சை செடி போன்ற விவிலிய நிகழ்வுகளைச் சித்தரிக்கும் மாதிரிகள் மற்றும் ஓவியங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

திருச்சபை உறுப்பினர் கள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, குழந்தைகளின் வியக்கத்தக்க படைப்பு களைப் பார்வையிட்டனர்.

தங்களது திறமைகளை இவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்திய சிறு வர்களை அனைவரும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்தக் கண்காட்சி மாணவர்களின் ஆன்மீகக் கற்றலோடு, அவர்களின் படைப்பாற்றலையும் வளர்க்கும் ஒரு சிறந்த களமாக அமைந்ததாக திருச்சபை நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை ஞாயிறு பள்ளி

பொறுப்பாளர் அனிதா செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஜே.ஏ.பரமானந்தம், அருண்

ஆனந்தராஜ், போதக செயற்குழு உறுப்பினர் எஸ் என் ஜேக்கப், ஆடம் அப்பாதுரை,

ஜான், ராஜா, டிசி உறுப்பினர் காட்வின் மற்றும் ஜெபகிங் ஆகியோர் கலந்து கொண் டனர்.



