இந்திய மருத்துவத் துறையில் முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படும் ‘CAHOCON 2026’ மாநாட்டில் கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி.பழனிசாமிக்கு, அவரது சிறந்த தலைமைப் பண்பைப் பாராட்டி ‘CAHO மெடாலியன் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ராடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மருத்துவத் துறையில் அவர் ஆற்றியுள்ள ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருதை வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட இந்தியா மற் றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண் டனர்.
டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத் துவத் துறையில் முன் னோடியாக விளங்கும் இந்த மருத்துவமனை, சமீ பத்தில் கோயம்புத்தூரில் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த ஒரு முக்கியப் பயிலரங்கத்தை யும் நடத்தியது” என்றார்.



