கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற ரேலா மருத்துவமனை 5 வயதான குழந்தைக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்து சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. கல்லீரல் மாற்று சிகிச்சையைப் பெற்ற மிகக் குறைந்த வயதுள்ள நபராக இக்குழந்தையை உள்ளார்.
கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை ஒரு நிச்சயமான தீர்வை வழங்கியிருக்கிறது. எவ்வித சிக்கல்களும் இல்லாமல் இந்த உறுப்புமாற்று சிகிச்சை நடைபெற்றது மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் இச்சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ரேலா மருத்துவமனையின் தலைவர் புரொஃபசர் முகமது ரேலா பேசுகையில், “குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையானது, முற்றிலும் ரோபோட்டிக் செயல்தளத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருப்பது உலகில் இதுவே முதன் முறையாகும். அறுவைசிகிச்சை தளத்திலும் கூட இது ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வாகும்” என்றார்.
தொடர்ந்து ரேலா மருத்துவமனையின் முதுநிலை நிபுணரான டாக்டர். ராஜேஷ் ராஜலிங்கம் பேசுகையில், “ரோபோட்டிக் அறுவைசிகிச்சை துல்லியத்தையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. இதற்கும் கூடுதலாக, நோயாளிக்கு ஏற்படும் வலியையும் மற்றும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலஅளவையும் இது குறைக்கிறது” என்றார்.
பின்னர் ரேலா மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இரையக குடலியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். நரேஷ் சண்முகம்,
இந்த 5 வயது குழந்தைக்கு செய்யப்பட்டிருக்கும் சிகிச்சை செயல்முறையின் வெற்றி என்றார்.



