fbpx
Homeபிற செய்திகள்ரிவர் நிறுவனத்தின் இண்டி எஸ்.யூ.வி. அறிமுகம் முன் பதிவு துவக்கம்; ஆகஸ்டில் விநியோகம்

ரிவர் நிறுவனத்தின் இண்டி எஸ்.யூ.வி. அறிமுகம் முன் பதிவு துவக்கம்; ஆகஸ்டில் விநியோகம்

பெங்களூரைச் சேர்ந்த மின்சார இருசக்கர வாகனம் (EV)) தொடக்க நிறுவனமான ரிவர் வாகனங்களுக்கான SUV இண்டியை அறிமுகப்படுத்துகிறது.
இண்டி வாகனம் ஒரு புரட்சிகரமான புதிய வடிவமைப்புடன் வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ரிவர் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுகுமுறை

‘வடிவமைப்பில் கவனம் செலுத்தும் அணுகுமுறையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதே ரிவர் நிறுவனத்தின் குறிக்கோள். எங்கள் முதல் தயாரிப்பு, இண்டி, பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டு வெவ்வேறு அம்சங்களை இணைக்கும் தைரியமான அறிக்கையாகும்.

நடைமுறை, திறன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்றையும் முழுமையாக ஒருங்கிணைத்த மிகவும் விவேகமான ஸ்கூட்டராக இது இருக்கும்’ என்று ரிவர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் மணி கூறியுள்ளார்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வேறு எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இல்லாத வகையில் இந்த இண்டி ஸ்கூட்டரில் 14 அங்குல சக்கரங்கள் உள்ளன. இருக்கையின் கீழ் 43 லிட்டர் சேமிப்பு பெட்டி மற்றும் 12 லிட்டர் முன்பக்க சேமிப்பு பெட்டி, மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இண்டி மிகப்பெரிய சேமிப்பு இடத்தைக் கொண்டுள்ளது.

இண்டியின் பக்கங்களில் உள்ள பிரத்யேகமான லாக் அண்ட் லோட் பேஸ்கெட்டுகளை தேவைகளுக்கேற்ப பலவகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் இந்த வாகனத்தில்தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

‘இண்டி தற்போதூள்ள இந்தியர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. வடிவமைப்பு நுணுக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் தனித்துவமான கலவையா னது இண்டிக்கு ஒரு தனித்துவமான பண்பைத் தருகிறது’ என்று ரிவர் நிறுவ னத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி விபின் ஜார்ஜ் கூறினார்.

6.7 kW அதிகபட்ச பவர் கொண்ட சக்திவாய்ந்த மோட்டார் மூலம் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் இண்டியை ஓட்டிச் செல்லமுடியும். இண்டியின் விலை ரூ.1,25,000 (எக்ஸ்ஷோரூம் பெங்களூரு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுகள் இப்போது ரிவர் வலைத்தளத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2023 முதல் விநியோகம் செய்யப்படும்.

படிக்க வேண்டும்

spot_img