சேலம் சென்ட்ரல் சட்டக்கல் லூரியில் தேசிய அளவிலான, தற்கொலை, பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள் என்ற தலைப் பிலான கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத்தலைவருமான த.சரவணன் தலைமை தாங்கி பேசியதாவது: இப்போதைய சூழலில் மாணவர்களில் பலர் பல்வேறு விதமான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்கின்ற னர். தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றார்.
சிறப்பு விருந்தினர் சினேஹா அறக்கட்டளையின் நிறுவனரும், மனநல துறைத் தலைவரும், தன் னார்வ சுகாதார சேவைகள், சென்னை அடையாறு மனநல மருத்துவருமான லக்ஷ்மி விஜய குமார் பேசும்போது ஆன்லைன் ரம்மி போன்ற நிதி இழக்கும் அபாயகரமான விளை யாட்டுகளில் மக்கள் ஈடுபடுவதால் அதிகமான பண இழப்பு அபாயம் ஏற்படுகிறது என்றார்.
மனநல ஆலோசகரும் தரு மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர் மோகன்ராஜ் பேசும் போது, தமிழ் காப்பியங்கள் மற்றும் சமயம் சார்ந்த சில நூல்களில் தற்கொலைகள் பற்றி குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டினார். டாக்டர் மணியனின் ஆராய்ச்சி கட்டுரையை சான்றாக கூறினார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளரும், பொது அறுவை சிகிச்சை பேராசிரியரு மான மருத்துவர் பி.வி.தனபால் பேசும்போது, நாளொன்றுக்கு உலக அளவில் 8,00,000 தற்கொலைகள் நடந்து வருகின்றன. அதிலும் 20% தற்கொலைகள் இந்தியாவில் நடக்கின்றன. குறிப்பாக சேலத்தில் தினமும் ஒரு தற்கொலையாவது நடக்கிறது என்றார்.
விநாயகா மிஷன்ஸ்
தடயவியல் மருத்துவத்தலைவர் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் வள்ளிநாயகம் பேசுகையில், அதிகமான தற்கொலைகள் கற்பழிப்புகளாலும், ஆன்லைன் விளையாட்டுகளினாலும், நிதி இழப்பு ஏற்படுத்தும் விளையாட் டுகளில் ஈடுபடுவதாலும் தான் ஏற்படுகின்றன என்றார்.
தமிழ்நாடு முன்னாள் உதவி இயக்குநர்,தடய அறிவியல் துறை இயக்குநர் கே.பாரி பேசும்போது, பல தற்கொலைகளை அவரது அனுபவத்தில் சந்தித்த வழக்குகள் மூலம் எடுத்துக்காட்டி எவ்வாறு நடந்தது இதற்கான காரணம் என்ன என்பதை விளக்கினார்.
கருத்தரங்கத்தின் ஆய்வறிக் கையை கல்லூரி பேராசிரியர் டாக் டர் பாலராமலிங்கம் சமர்பித்தார். பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மாணவ, மாணவிகள். பேராசி ரியர்கள், சட்ட வல்லுநர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
72-க்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளனர். ஆய்வுகுழு தலைவர்களாக முனைவர் பூஜா சக்கரவர்த்தி, முனைவர்.ராஜவெங்கடேசன், முனைவர்.இந்திரா, முனைவர்.சரளா, முனைவர்.மெரசிலின் புஷ்பா, முனைவர் சோழ ராஜா ஆகியோர் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை தேர்ந்தெடுத்தனர்.
கல்லூரி பேராசிரியை நீரஜா நன்றி கூறினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக இயக்குநர் மாணிக்கம், டீன் டாக்டர் கீதா, முதல்வர் பேகம் பாத்திமா ஆகியோர் செய்திருந்தனர்.