Homeபிற செய்திகள்கோவை மாவட்ட மைய நூலகத்தில் குடியரசு தின விழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் குடியரசு தின விழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் 77வது குடியரசு தினவிழா காலை 9.00 மணிக்கு துவங்கியது.

கோவை மாவட்ட மைய நூலகர் ஆர் வித்யாபோஸ் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

கோவை மாவட்ட நூலக அலுவலர் இராஜேந்திரன் விழாவிற்குத் தலைமையேற்று இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி நூலக வளர்ச்சியை மேம்படுத்த நூலகப் பணியாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து பணியாற்று மாறு அறிவுரை வழங்கி தலைமையுரையாற்றினார்.

இறுதியாக மூன்றாம் நிலை நூலகர் எம்.மகாலட்சுமி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

இவ்விழாவில் மாவட்ட நூலகப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் நூலக பணியாளர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img