கோவை நவக்கரையில் உள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வியில் நற் பணியாற்றிய சிறந்த ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பள்ளிகளை அங்கீகரிக்கும் வகையில் மறைந்த விஞ்ஞானி. டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் நினைவாக தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி ஏஜேகே கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ராஜூ வரவேற்புரை வழங்கினார்.
ஏஜேகே கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலர் அஜீத் குமார் லால் மோகன் தலைமை யுரையாற்றினார்கள். அவர் தம் உரையில், “தன்னுடைய அப்பா மறைந்த விஞ்ஞானி டாக் டர். ஆர்.எஸ்.லால் மோகன் மேற்கொண்ட கடலுயிர் ஆய்வுகள், 21000 விஞ்ஞான வெளியீடுகளின் சாதனை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் அவர் மேற்கொண்ட டால்பின், கடல்பசு, திமிங்கலம் போன்ற கடலுயிர் ஆய்வுகள், இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய, அறக்கட்டளையின் வாயிலாக மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் பணிகள், புதிய மீன் இனங்கள் கண்டுபிடிப்பு ஒரு புதிய மீன் இனம் ‘‘Lalmohaniavelutina’’ இவரது பெயரிலேயே அறிவிக்கப்பட்டது.

விஞ்ஞானி டாக்டர். ஆர்.எஸ்.லால் மோகன் நினைவாக விருது வழங்குவதை பெருமிதம் கொள் கிறேன்” என்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைவர் டாக் டர்.வி.நாராயணன் கூறியதாவது: ஏஜேகே கலை அறிவியல் கல் லூரி சிறந்த ஆசிரியர்களையும், பள்ளிகளையும் மற்றும் முதல்வர்களையும் தேர்ந்தெடுத்து அவர் களை ஊக்குவித்து விருது வழங்குவது பாராட்டத்தக்கது. உள்நாட்டு கண்டுபிடிப்புகள், மேம் பட்ட விண்வெளி பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா உலகளவில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் 4வது முக்கிய இடத்தில் உள்ளது. ரயில்வே துறையும் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்தியாவில் எழுத்தறிவு 12 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந் திய மக்களின் ஆயுள் நாள்கள் சராசரியாக 72 சதவிகிதம் வயது வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து விஞ்ஞானி. டாக்டர். ஆர்.எஸ்.லால் மோக னின் “ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானியின் வாழ்வியல் சித் திரம்” என்ற புத்தகத்தை டாக் டர்.வி.நாராயணன் வெளியிட ஏஜேகே கல்வி நிறுவனங்களின் தலைவர் அஜித் குமார் லால் மோகன் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து கடல்பசு என்ற புத்தகத்தை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் தலைவர் டாக்டர். ஜோ கே. கிழக் கூடன் வெளியிட ஏஜேகே கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பிந்து அஜித் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பாண்டிச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்த 200க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பள்ளி, சிறந்த முதல்வர்களுக்கு சான்றிதழும் கோப்பையும் வழங்கி சிறப் பித்தார்கள்.
இவ்விருது வழங்கும் விழாவில் பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிகள் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கல்லூரி பேராசிரியர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



