கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மசக்காளிபாளையத்தில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். மாணவரணி அமைப்பாளர் சிவபிரகாசம் வரவேற்றுப் பேசி னார். மாணவரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து, திமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி சிறப்புரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- தமிழ் மொழிதான் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழ் மொழியை காத்தவர் பெரியார். ஆனால் பெரியாரை பற்றி சிலர் அவதூறு பரப்புகின்றனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னார் என்று கூறுகிறார்கள்.

ஆனால், பெரியார் இல்லை என்றால் தமிழ் மொழி இல்லை. அதைத் தொடர்ந்து அண்ணா, கலைஞர் தமிழ் மொழியை காத்து வளர்த் தார்கள். தமிழ் மொழிக்கு ஏராளமான இலக்கிய நூல்களை கொண்டு வந்தார்கள்.
ஒன்றிய அரசு மொழியையும், மதத்தையும் வைத்து பிரிக்க பார்க்கிறார்கள். இந்தி மொழியை கற்றால் தான் முன்னேற முடியும் என்கிறார்கள். ஆனால் இந்தி மொழியை கற்ற பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள் இன்று 24 வது இடத்தில் உள்ளது.
இந்தி திணிப்பை ஏற்காத தமிழ்நாடு இன்று அனைத்து துறைகளிலும், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கின் றது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருப்பதை போல், தமிழும் இருக்க வேண்டும். அதேபோன்று மதத்தை வைத்து நம்மை பிரிக்க முயற்சிக்கின்றனர். அதுவும் நடக்காது. கொங்கு மண்டலத்தில் அது நடக்காது.

தீரன் சின்னமலை நோக்கி பிரிட்டிஸ் படையெடுத்து வந்தபோது, அவருக்கு துணை யாக நின்றது ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தான். கோனியம்மன் கோவிலுக்கும், தண்டுமாரியம்மன் கோவிலுக்கும் நிலத்தை வழங்கியது திப்பு சுல்தான் தான். எனவே, மத பிரிவினையை தூண்டும் அவர் களின் எண்ணம் பலிக்காது. இவ் வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில், மாநில தீர்மானகுழு செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), மேயர் ரங்கநாயகி, எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா, மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் அருள் மொழி, மீனா ஜெயக்குமார், தமிழ்ச்செல்வன், நாச்சிமுத்து, கோகுல், முரா.செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



