ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அடிப்படை ஆங்கிலம் கற்றுக் கொள்ளுதல், ஓவியம் வரைதல் மற்றும் விளையாட்டுகள், பாடல்கள் போன்ற கோடைகால பயிற்சிகள் சத்தியமங்கலம் மற்றும் கோபி பகுதிகளில் இரு நாட்கள் நடைபெற்றது.
இந்த பயிற்சிகளில் அப்பகுதி கிராமங்களில் இருந்து 65 குழந்தைகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
ஓவிய பயிற்சியாளர் அருள் பிரகாஷ் மற்றும் ஆங்கில பயிற்சியாளர் சூர்யா போன்ற பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்கள். இந்தக் கோடைகால பயிற்சியை ரீடு இயக்குனர் கருப்பசாமி தலைமையேற்று நடத்தினர்.
நிறுவன பணியாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.