fbpx
Homeபிற செய்திகள்அம்ருதா பிஎச்டி மாணவருக்கு விமான உற்பத்தி ஆராய்ச்சிக்காக எஸ்ஐஏடிஐ விருது

அம்ருதா பிஎச்டி மாணவருக்கு விமான உற்பத்தி ஆராய்ச்சிக்காக எஸ்ஐஏடிஐ விருது

கோயம்புத்தூர் அம்ருதா பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல்
துறையின் பி.எச்.டி. மாணவர் விஸ்வஜித் எஸ். நாயர் சொசைட்டி ஆப் இந்தியன் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜீஸ் – இண்டஸ்ட்ரீஸ் (எஸ்ஐஏடிஐ) வழங்கும் சிறந்த ஆராய்ச்சி கட்டுரை விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த விருது பெங்களூரில் உள்ள டாக்டர் வி.எம்.

காடகே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற எஸ்ஐஏடிஐ ஆண்டு விழாவில் வழங்கப்பட்டது. இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ துறையின் இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, எஸ்ஐஏடிஐ தலைவர் டாக்டர் சி.ஜி. கிருஷ்ணதாஸ் நாயர், நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரிஸ் இயக்குநர் டாக்டர் அபய் பாஷில்கர், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயகிருஷ்ணன் மற்றும் இந்தியாவின் முன்னணி விமானத் துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

இது குறித்து விஸ்வஜித் கூறுகையில், “இந்த விருதைப் பெறுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
என்னைப் போன்ற இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு எங்கள் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வாய்ப்பை வழங்கியதற்காக எஸ்ஐஏடிஐ-க்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இது விமான ஆராய்ச்சியில் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இந்த ஆராய்ச்சி, அம்ருதா பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறையின் தலைவர் டாக்டர் கே. ரமேஷ்குமார் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். சரவண முருகன் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img