மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து, ‘வளர்ச்சியடைந்த வேளாண்மை உறுதி இயக்கம்’ என்னும் தேசிய அளவிலான திட்டத்தினை நடத்த உள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
வரும் 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் கீழ் , வேளாண் விஞ்ஞானிகள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் நேரடி யாகத் தொடர்புகொண்டு, விவசா யம் குறித்தும் அரசின் திட் டங்கள் பற்றியும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார்கள்.
அவர் மேலும் இது பற்றி கூறுகையில், “இந்த இயக்கத்தின் படி, வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்ட 2,170 நிபுணர் குழுக்கள் மே 29 முதல் ஜூன் 12 வரை 723 மாவட்டங்களில் உள்ள 65,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும். இக்குழுக்கள் காலை, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொள்வர்” என்றார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத் தின் இயக்குனர் முனைவர் பெ.கோவிந்தராஜ் கூறுகையில், “வளர்ச்சியடைந்த வேளாண்மை உறுதி இயக்கத்தினை
செயல்படுத்திட நிறுவன விஞ்ஞானிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விஞ்ஞானிகள் ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் வேளாண் அனு பவங்களையும் அறிந்து கொள் வார்கள்” என்றார்.



